2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :


2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :

இஸ்லாமிய மார்க்கம் அவர்களிடத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெண்களுக்கு இளைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப் பட்டன. பெண்ணும் மனித இனத்தின் ஓர் அங்கம்தான் என்ற நிலையை இஸ்லாம் அவளுக்கு மீட்டிக் கொடுத்தது.
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.” (அல்குர்ஆன் 49:13)
மனித இனம் என்ற அடிப்படையில் பெண் ஆணுக் குச் சமமானவள். அவள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலி யைப் பெறுவதிலும் ஆணுக்குச் சமமாகவே இருக்கிறாள் என இஸ்லாம் கூறுகிறது.
”இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) தூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.” (அல்குர்ஆன் 16:97)
”நயவஞ்சகத்தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ் சகத்தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.” (அல்குர்ஆன் 33:73)
இறந்துபோன கணவன் விட்டுச் செல்லும் அனந்தரச் சொத்துக்களில் பெண்ணும் ஒன்று எனக் கருதப்பட்டு வந்ததை அல்லாஹ் தடை செய்துவிட்டான்.
”இறைநம்பிக்கையாளர்களே! பெண்களை (அவர்களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்க ளுக்குக் கூடாது.” (அல்குர்ஆன் 4:19)
ஒரு பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல் படுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. சொத்துரிமையில் அவளைப் பங்குதாரராக இஸ்லாம் ஆக்கியுள்ளது; அவளை வாரிசுப் பொருளாகக் கருதவில்லை. தன் உறவினர் விட்டுச்செல்லும் சொத்திலும் அவளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ”பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவி னரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந் தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.” (அல்குர்ஆன் 4:7)
(சொத்துப்பங்கீட்டில்) ”உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.” (அல்குர்ஆன் 4:11)
ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் நிலையில் வாரிசாம், சொத்தில் பங்கு பெறக்கூடியவள் என இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண் அதிகப் பட்சமாக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மனைவியரிடையில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும். மனைவியரிடத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
”நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 4:19)
பெண்ணுக்கு மஹர் என்ற ஜீவனாம்சத்தை (மணக் கொடையை)க் கொடுத்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். மணமகன் வாக்களித்த ஜீவனாம்சத்தை மணப்பெண் தானாக முன் வந்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அதை முழுமையாகவே அவளுக்கு வழங்கி விடவேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
”நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)” (அல்குர்ஆன் 4:4)
ஒரு பெண், தன் கணவன் வீட்டில் பொறுப்புள்ள வளாக, ஆலோசனைகளை வழங்குபவளாக, தீயவற்றிலிருந்து வீட்டாரை விலக்கக் கூடியவளாக, தன் குழந்தை களை வழிநடத்திச் செல்லும் குடும்பத்தலைவியாக இருக்கவேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.
”ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புடையவளாவாள். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.”
கணவன் தன் மனைவிக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக