படத்தொகுப்பு

‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’


இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
 
பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.  சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
 
இன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  செல்வந்தர்கள் மத்தியில் செல்வந்தராக திகழ்வதற்கு சிலருக்கே வாய்ப்பு கிட்டும். அவ்வாறான செல்வந்தர்களில் ஒருவராக ஜகத் பின்னகொடவிதானவை கருதுகின்றேன். 
 
ஆசியாவின் மிக உயர்ந்த பௌத்த சிலையை அமைப்பதற்கு பின்னகொடவிதான முயற்சி எடுத்து வருகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்படும். 
 
சிலை செதுக்குவது மிகவும் கடினமான ஓர் கலையாகும், சில அரசியல் தலைவர்களின் சிலைகள் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன என்பதனை அவதானித்தால் இந்த உண்மை தெரிய வரும் என சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.