படத்தொகுப்பு

போர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண


வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களின் நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தால் ஆளும் கட்சியின் உள்ள இடதுசாரிகள் போர்க்கொடி தூக்குவோம். 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க கூடாது என்பதனை ஜனாதிபதியிடம் கண்டிப்பாகவே கூறியுள்ளோம் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில்,
13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களின் நிலைப்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கையாக கொள்ள முடியாது. எவ்வாறாயினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் போது தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது.
நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காக சகல தரப்பினரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்பட்டு விடும். ஆளும் கட்சியில் உள்ள இடதுசாரி கொள்கையுடையவர்கள் என்ற வகையில் எமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு மிக தெளிவாக கூறியுள்ளோம். குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வதோ அதிகாரங்களை குறைப்பதோ இடம்பெறக் கூடாது என்பதை கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளோம். vi