படத்தொகுப்பு

இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டி


இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டிவியினால் பெருகும் வன்முறைகள்!! – ஆய்வில் தகவல்!!!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாசப் படங்களும்,முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளுமே காரணம் என்று நீதிபதி சந்திரசேகர் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி. சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை 2011 செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்தது.

 இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக் காட்டியிருந்தது.

 இந்நிலையில், மும்பை ஐகோர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின்போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

·         பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்குஇணைய தளங்களில் வலம் வரும் ஆபாசப் படங்களும்முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளுமே காரணம்.

·         இவை எளிதாகக் கிடைப்பதால்இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

·         இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.

·         இதைஉடனடியாகத் தடுக்க வேண்டும்.  பெண்களுக்கு எதிராகக் குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்கப் படுத்த வேண்டும்.

·         பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும்அவரை சிறாராகப் பார்க்கக் கூடாது. இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும்மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்இதைச் செய்ய வேண்டும்.

·         பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களைஅரசியல் கட்சிகள்தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது.

·         பள்ளிகளில்தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைமாணவியர் புகாராகத் தெரிவிக்ககுறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.

·         இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வும் பிள்ளைகள் எப்படிச் சீரழிகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அதிகமாக “டிவி‘ பார்க்கும் சிறுவர்கள்சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் : – ஆய்வில் தகவல்!

 வாஷிங்டன்: அதிகமாக “டிவி’ பார்க்கும் சிறுவர்கள், எதிர்காலத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

 நியூசிலாந்தில் உள்ள, “ஒட்டாகோ’ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அந்நாட்டில் உள்ள டுனெடின் நகரத்தில், 1972-73 ஆண்டுகளில் பிறந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஐந்து முதல், 15 வயதாகும்வரை,இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அவர்களின் “டிவி’ பார்க்கும் அளவு கண்காணிக்கப்பட்டது.  

 அதிகமாக “டிவி’      பார்க்கும் பழக்கம் கொண்டவர்களிடையே, அவர்கள் பெரியவர்களானதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக இருந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

 மேலும், அவர்களிடையே முரட்டுத்தனம் மற்றும் சமூக விரோத நடவடிக்கை போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

 சிறுவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான நிகழ்வுகள், பிற்காலத்தில் அவர்கள் வாழ்வில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. அந்த வகையில், அதிகமாக “டிவி’ நிகழ்ச்சிகளைப் பார்த்து வளரும் சிறுவர்கள், பெரியவர்களாகும்போது, அவர்களிடம் சமூக விரோத மற்றும் குற்ற நடவடிக்கைள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். டிவி’ பார்ப்பதால் மட்டும்தான், குழந்தைகளிடம் சமூக விரோத எண்ணங்கள் வளர்கின்றன என, நாங்கள் சொல்லவில்லை. எனினும், குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் “டிவி’ பார்க்கும் நேர அளவைக் குறைத்தால்,சமூகவிரோதத் செயல்கள் குறைய வாய்ப்புள்ளது.

 ஒரு நாளில், “டிவி’யில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் குழந்தைகள் பார்ப்பது நல்லது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 நமது குழந்தைகளை செல்ஃபோன், இன்டர்நெட், டிவி ஆகியவற்றிலிருந்து தள்ளி வைப்பது நல்லது. அதை அவர்கள் பயன்படுத்தும்போது கண்காணிப்பது ரொம்ப ரொம்ப நல்லது என்பதை இந்த ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.