படத்தொகுப்பு

அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.


(ஹாதி)
க்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்டபட்ட அட்டாளைச்சேனை அக்/
அந் நூர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தர, ஐந்தாம் தர மாணவர்கள் கல்விபயிலும் கட்டிடத்தின் கூரை இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடம் தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனைக்கு தெரியப்படுத்தியும் இதனை திருத்துவதற்கான எந்தவித உத்தரவும் கிடைக்கப்பெறவில்லையென பொறுப்பற்ற முறையில் பாடசாலை அபிவிருத்தி நிருவாகம் தெரிவிப்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொறுப்புவாய்ந்த வலயக்கல்விப்பணிப்பாளரே பல மாணவர்களின் உயிர்கள் பலியாவதற்கு முன்னர் இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

–