படத்தொகுப்பு

லெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்!


லெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் இதுவரை 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களில் 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகாரபூர்வ அனுமதி பெற்று முகாம்களில் தங்கியுள்ளவர்கள் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் அனுமதிக்காக எல்லைகளில் காத்திருப்போர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 1/4 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதால் அவர்களில் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிவரும் லெபனான் அரசு, 370 மில்லியன் அமெரிக்க டாலர்களை அரபு நாடுகள் லெபனானுக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.