படத்தொகுப்பு

முஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்


532705_183064798509567_124424498_n

 

 

 

 

 

 

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ (17-04-2013) முஸ்லிம் நாட்டு தூதுவர்களை சந்தித்திருந்தார். இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அஸ்வர் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தசிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் எந்த பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன, எங்கு இஸ்லாம் அவமதிக்கப்பட்டது போன்ற விபரங்களையும் ஜனாதிபதி மஹிந்தவிடம் விளக்கமாக கூறியுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் தூதுவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கையில் பின்வரிசையில் அமர்ந்திருந்த அஸ்வர் எம்.பி. குறுக்கிட்டு அந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டுவிட்டது, தீர்க்கப்பட்டுவிட்டது என அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வர் எம்.பி. இவ்வாறு தொடர்ந்து குறிக்கிடவே ஒருகட்டத்தில் பொறுமையிழந்த முஸ்லிம் தூதவர்கள், அஸ்வரை நோக்கி, தயவுசெய்து குறுக்கிடாதீர்கள், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை, இலங்கை ஜனாதிபதியிடம் கூறுவதற்கு எங்களை அனுமதியுங்கள் என காட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் ஜனாதிபதியுடனான கூட்டம் நிறைவடைந்த பின்னர் முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் அஸ்வர் எம்.பி.யின் செயற்பாடு குறித்து தமது கவலையை தமக்கிடையே வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைதியாக அமர்ந்திருந்தபோதும் அஸ்வர் எம்.பி.யே இடையூறு விளைவித்தமை பற்றி முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் வேதனைப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சந்திப்புக்கு ஏனைய முஸ்லிம் அமைச்சர்களான பௌஸி, அதாவுல்லா, றிசாத் பதியுதீன் ஆகியோர் அழைக்கப்படாமை குறித்தும் அவர்கள் தமக்கிடையே பேசிக்கொண்டுள்ளனர். 

இதன்போது அஸ்வர் எம்.பி. குறித்து ஒரு அடைமொழி சொற்தொடரையும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் கூறின. இருந்தபோதும் அந்த சொற் பிரயோகத்தை உங்கள் நண்பன் பொலிஸ் தவிர்த்து கொள்கிறேன்.

கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் இந்த தகவல் கிடைத்தது.

முக்கிய குறிப்பு – இலங்கை போன்ற நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையில் உள்விவகாரங்களில் பொதுவாக தலையிடுவதில்லை. அவ்வாறான தலையீடுகள் இலங்கையின் இறைமைய பாதிப்பதாக அமையும். இருந்தபோதும் இலங்கை முஸ்லிம்கள் பௌத்தசிங்கள இனவாத செய்றபாடுகளினால் பாதிக்கப்பட்டதை ஜனாதிபதியிடம் தைரியமாக சுட்டிக்காட்டிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நன்றி கூறுகிறோம்.

உங்கள் நன்பான் பொலிஸ்