படத்தொகுப்பு

மியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி!


மியான்மரில் ஆண்டுதோறும் ‘திங்யான்’ என்னும் நீர் திருவிழா நடைபெற்று வருகிறது.

4 நாள் திருவிழாவாக கடந்த 13ம் தேதி முதல் 16 வரை நடைபெற்ற இந்த விழாவின்போது நிகழ்ந்த கொலை, விபத்துகள், அடிதடி சம்பவங்களில் 33 பேர் பலியானதாகவும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மியான்மர் பௌத்தர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் திங்யான் நீர் திருவிழாவும் ஒன்று.

இந்த ஆண்டின் திருவிழாவின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று குறைவு தான் என போலீசார் தெரிவித்தனர்.