படத்தொகுப்பு

இலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு!


இலங்கை இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர கூறினார்.
எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல் வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல் விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
-Thinakarn