படத்தொகுப்பு

நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.


நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது இனம் தெரியாதோர் சிலர் தீ மூட்டி சேதப் படுத்தியுள்ளனர். குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள பிரதேச போலிஸ் நிலையத்தின் ஊடக பேச்சாளர் ஒருவர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்த தாக்குதல் திட்டமிடப் பட்ட தாக்குதலாகும். எனினும் குற்றவாளிகள் எவரும் இதுவரை இனம் காணப் படவில்லை என தெரிவித்துள்ளார். 

குறித்த மஸ்ஜிதில் மத்ரஸா ஒன்றும் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கதாகும். 

காலை ஐந்தரை மணிக்கு மூண்ட இந்த தீயை தகவல் அறிந்தவுடன் விரைந்து தீயணைப்பு படையினர் அனைத்து விட்ட போதும் பாரிய சேதங்களை அது விளைவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த மஸ்ஜித் மீது 2011 ம் ஆண்டும் இவ்வாறு இனம் தெரியாதோரால் தீ மூட்டி தாக்குதல் நடத்தப் பட்டுள்ளமை  குறிப்பிடத் தக்கது.