படத்தொகுப்பு

இஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்


20130417-174212.jpg

-ad-
இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை “பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ்“ என்று அறிமுகம் செய்துள்ளவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக, சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது, இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை. இதை நிறுத்துங்கள். என்று சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையத்தளங்களும் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.