படத்தொகுப்பு

வடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.


 
 

எஸ்.எச்.எம்.வாஜித்

1990 ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்றைக்கு 23 ஆண்டுகள் பூர்தியும் ஆகிவிட்டது  இன்நிலையில் மீண்டும் இம்மக்கள் தங்களின் சொந்த இடங்கனில் மீள்குடியேற முடியாத நிலையினை சில இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படுகின்றது. எமது முஸ்லிம்களிடம் மீண்டும் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இந்நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐயா ராசம்பந்தன்,மாவை சேனாதிராஐh மேலும் ஓய்வு பெற்ற நீதி அரசர் விக்னேஸ்வரன் போன்ற தமிழ் மக்களின் தலைசிறந்த தலைமைகள் முஸ்லிம்களை கைகூப்பி அழைக்கும் இச்சந்தர்பத்மில் தமிழீ விடுதலைப்புலிகளின் பாசறையில் பயிச்சி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்களநாதன்,வினோ இன்னும் சில இனவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிகளுக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர்.
ஏன் இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருகின்றனர்? முஸ்லிம்கள் அன்று நீங்கள் வேண்டிக் கொண்டதற்கினங்வே வெளியேறினார்கள். ஏன் வெளியேறினார்கள் உங்களுடைய போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்க்ககூடாது நீங்கள் தனித்தமிழ் ஈழத்தை உருவாக்குங்கள் என்றுதானே தங்களின் மூதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டும் 24 மணித்துக்குள் விட்டு ஒதுங்கினார்கள்.
ஆனால் உங்காளால் தனிநாட்டு கோரிக்கியினை அடையமுடியவில்லை இதற்கு என்ன செய்வது இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.
வன்னியினை அழித்த நீங்கள் வன்னியினை கட்டியொழுப்ப துடியாய் துடிக்கும் அமைச்சர்களையும்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் இனவாத முத்திரையினை குத்தி தமிழ் முஸ்லிம்களிடையயே மீண்டும் கசப்புணர்வினை ஏற்படுதத்த முனையும் நீங்கள் உங்கள் மதத்தின் கொள்கைகளை சரியாக விளங்கவில்லை தயவு செய்து நிங்கள் உங்கள் மனசாட்சியை தொட்டு நீங்கள் வடமாகாண முஸ்லிகளின் விவகாரத்தில் தலையிடாதிர்கள்.
1990 வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வரலாறு நேற்று வந்த வரலாறு அல்ல இலங்கை வரலாற்றின் ஆதிக்குடிகளுக்கு முன்னரே அறபு முஸ்லிகளின் தொடர்பு இருப்பதாக கலாநிதி பாலேந்திரன் குறிப்டும் செய்தியினை நீங்கள் படிக்க வில்லையா? சில வாரங்கஞக்கு முன்பு நீங்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களை விரட்டிநீர்கள் இதே நேரம் சிங்கள குடியேற்றம் இடம்பெறும் இடங்களில் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்? உங்களால் எதுவும்; செய்ய முடியாது தானே.
ஏன் எங்கள் மீது இவ்வளவு காழ்புணர்சி கொள்கின்றீர்கள். 1990ம் ஆண்டு எம்மை விரட்நீர்கள் அவ்வாறே நீங்களும் தழீழக் கணவுடன் மெனிக்பாமில் தூங்காமால் அடைக்கப்பட்டீர்கள் என்ற வரலாற்றை மறந்து விட்டீர்களா வவுனியா மெனிக் பாம் தான் உங்களின் தமிஈழம் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது. ஒரு சமூகத்தை நசுக்கி இன்னொருசமூகம் வாழ நினைக்குமாயின் அந்த சமூம் நிச்சயமாக நிச்சயமாக கடும் கஸ்டத்தை சந்திக்கும் என்பதை வரலாறு பதிந்துள்ளது அதனை நீங்களும் மறக்கமாட்டீர்கள் அதுதான் மெனிக்பாம்.
எவர்கள் எல்லாம் முஸ்லீம் மீது கைவைக்கின்றார்களோ அவர்கள் ஒரு போதும் விடிபெறமாட்டார்கள் வன்னி முஸ்லிம் அமைச்சர் வடமாகாண தமிழ் மக்களுக்காக தன்னால் முடியுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்கின்றார் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல், மேலும் காணிப்பிரச்சினை தீர்த்து வைத்தல் மேலும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இனம், மொழி பாராமல் அயராமல் உழைத்து வரும் இழந்தலைவர்களை உங்களைப்போன்ற இனவாத உறுப்பினர் பட்டியலில் ஏன் சேர்க்கின்றீர்கள்.