படத்தொகுப்பு

பொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..?


RAAAIPSL                                                                                           

 

பொது பல சேனா அமைப்பினது ஏனைய பேரினவாத அமைப்புகளினது கோஷங்கள் சற்று தனிந்துள்ளது..! இது அனைத்து தரப்பினரும் உனரும் ஒரு உன்மை, இதனால் எமது முஸ்லீம் சமூகம் ஒருபுராம் சந்தோஷப் படுகிறது. என்றாலும் இது சந்தோஷப் படுவதற்கான காலமாக என்ன முடியாது என்பதே எமது கருத்து, ஏனெனில் இப்பொது இடம்பெற்றுவரும் சில சம்பவங்கள் இந்த சந்தேகத்தை நம்மில் தோற்றுவிக்கின்றது மறுக்க முடியாத உன்மை.

 
இதில், அன்மையில் பாதுகாப்பு செயளாருடமும், பொது பல சேனா அமைப்பினருடனும் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து அகில இலங்கை  ஜமிய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கை, அதனைத் தொடர்ந்து பொதுபல சேனா வெளியிட்ட அறிக்கை, அமரிக்காவில் பொது பல சேனாவின் 8 அலுவலகங்கள் திறக்கப்பட்டமை, கடந்த 8 ஆந் தேதி பொதுபல சேனா வின் குழு அமரிக்க நோக்கி பயனித்தமை என்பன இவாறான கேள்விகளை எம்முள் எழுப்புகிறது.
 
நாட்டில் முஸ்லிம்களுக்கு இப்போது பிரச்சினை இல்லை, எனவே நாம் இப்போது “குநூத்” ஓதத் தேவை இல்லை என ஜம்இய்யா அதிரடியாய் அறிவித்தது ஏன் என நம்ப முடியவில்லை. இந்த அறிவிப்பானது பாதுகாப்பு செயளாரின் அலுவலகத்தில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும், பொது பல சேனாவுக்கும் இடையே இடம் பெற்ற சந்திப்பின் பின்னரே விடுக்கப் பட்டது. ஏன் ஜம்இய்யா இந்த அறிவித்தலை குறித்த சந்திப்பின் பின்னர் விடுக்க வேண்டும்? இதன் பின்னனி என்ன? குறித்த கூட்டத்தின் இன்னொரு முடிவான ஜம்இய்யதுல் உலமாவும், பொது பல சேனாவும் அடுக்கடி சந்தித்துப் பேச வேண்டும் என்ற முடிவு முக்கியமானது. இவ்வளவு காலமும் பொது பல சேனாவுடன் நாம் பேச மாட்டோம் என கூறி வந்த ஜம்இய்யாவின் கொள்கை ஆட்டம் கண்டமைக்கான காரணம் என்ன? அப்படியானால் பொது பல சேனாவை ஜம்இய்யா அங்கீகரிக்கின்றதா?
 
இந்த இடத்தில் நம் இன்னுமொன்றையும் ஞாபகப் படுத்த விரும்புகின்றோம், கடந்த காலங்களில், அதாவது ஹலால் விவகாரம் தலை தூக்கியிருந்த போது ஜமிஇயா  விட்டுக்கொடுப்புகளோடு  நடந்துகொண்டமை இங்கே நினைவு கூறத்தக்கது.
 
இந்த நிகழ்வுகளின் அடுத்த ஒரு விடயம், பொது பல சேனாவின் திடீர் அமைதியும், ஹலால் விவகாரம் பற்றி நாம் இனி பேச மாட்டோம் என்ற அறிவிப்பும் சற்று ஆச்சரியத்தையே தந்தது, ஏனெனில் ஹலால் என்ற பேச்சுக்கே இலங்கையில் இடமில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு உறியவர்கள் அல்ல என்றெல்லாம் கூச்சல் போட்ட பொது பல சேனா ஏன் திடீரென மௌனமாக வேண்டும்? ஏன் அவர்களின் போராட்டத்தின் முக்கிய கோஷமான ஹலாலை கை விட வேண்டும்?
 
523476_542435245809077_1307496386_n
இந்த அமைதியின் இடைவெளியில் தான ஐக்கிய அமரிக்காவில் பொது பல சேனாவின் 8 கிளை அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது, போதாமைக்கு கடந்த 8 ஆந் திகதி பொதுபல சேனாவின் உயர் மட்டக் குழுவொன்று அமரிக்கா நோக்கி பயனமானது. இலங்கையில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காக போராடுவதாக கூறும் பொது பல சேனாவிற்கு ஏன் அமரிக்காவில் 8 கிளை அலுவலகங்கள்? பொது பல சேனா ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஆறு மாதங்கள் கூட நிரம்பாத சந்தர்ப்பத்தில் எவ்வாறு இது சாத்தியமாகின்யது. அத்னை விட இவர்கள் திடீரென அமரிக்கா சென்றது எதற்காக?
 
இத்தனை நாடகங்களும் பொது பல சேனாவிற்கு தம்மை பலப் படுத்திக்கொள்வதற்கு வழங்கப்படும் கால அவகாசமா என தோன்றுகிறது?
 
மேலும், பெப்ரவரி மாதம் காலியில் பாதுகாப்பு செயளாலரினால் திறந்து வைக்கப்பட்ட பொது பல சேனாவின் கலாசார மத்திய நிலையம் ஜெர்மனி பிரஜை ஒருவரினால் இலங்கையின் பௌத்த கலாசாரத்தை பாதுகாப்பதற்காக கூறப்படுகிறது. இந்த ஜேர்மன் பிரஜை ஒரு யூதன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது, மேலும் ஒரு யூதன் ஏன் இலங்கையின் பௌத்த கலாசாரத்தை பாதுகாக வேண்டும்?
இதன் பின்னகள் இப்போது நாம் சொல்லி நீங்கள் விளங்க வேண்டும் என்றில்லை…