படத்தொகுப்பு

(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..


News By :  A.H.M  Mowjood 

அல்லாஹவின் உதவியைப் பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்குவதே ஷைத்தானின் நோக்கமாகும். மேற்படி எண்ணத்தில் கருவூட்டப்பட்ட பாசிஸ போஷனைப் பிரவாக   பேரின செயற்பாடுகளின் நிமித்தம் அண்மைக்காலத்தில் இலங்கை மண்ணில் பினாமிகளால் பகிரங்கமாய் தேசிய ரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அரச மௌன விரதத்தால் கோரத் தாண்டவமாடிய முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வார்த்தைகள், சுலோகங்கள், நடவடிக்கைகள் போன்ற பூதாகாரமான ஷைத்தானின் திருவிளையாடல்களினால் இலக்கு வைக்கப்பட்ட சமாதான சருக்கல், விழுமிய விதண்டாவாதம், கலாச்சார கைவைப்புகள், பொருளாதார அத்துமீறல்கள், கலவர முனைவுகள் போன்றவற்றிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டியும்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எதிர்;கொண்டுள்ள ஆதாரபூர்வமற்ற நெருக்குதல்களிலிருந்து நெகிழவும், அதற்கு பலம் சேர்க்க   இறைஞ்சுவதிலும் நோற்பதிலும் ஸதகா மேற்கொள்வதிலும் ஈடுபட்ட அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக….. ஆமீன்….

எனவே, அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுர YMMA  கிளை தன்னையும் இணைத்துக்கொள்ளும் மேற்படி நற்கரும முனைவின் எதிரொலியாக ஹிஜ்ராபுர மக்களுக்கான ஸதகா நிகழ்வொன்றை கடந்த 2013-04-14 அன்று ஞாயிற்றுக்கிழமை மிக எளிமையாக நடத்தியது.

இந்நிகழ்வில் ஹிஜ்ராபுர YMMA  கிளை நிர்வாகிகள், அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் போன்றோர் கலந்து சிறப்பித்தமை இதயங்களை தியாக திளைப்பில் திருப்தி பெறவைத்து, நெஞ்சங்களை நெகிழ வைத்ததை அனுபவ ரீதியாக ஸ்பரிசித்தோம். 

அல்ஹம்துலில்லாஹ்….