படத்தொகுப்பு

(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.


 

By: ஜுனைட்நளீமி

அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாண பான்ஸ்டன் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

இஸ்லாம் அப்பாவிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது. வன்முறை என்பது இஸ்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. 

இக்குண்டு வெடிப்பின் பின்னால் பல கேள்விகளும் எழத்தான் செய்கின்றது. ஆப்கான் மீதான தாக்குதளுக்கு இரட்டைக்கோபுரத்தை தகர்த்து வழி வகுத்தமையும், வியட்நாம் மீதான தாக்குதலுக்கு தமது கடற்படையை தாக்கியழித்து காரணம் தேடிக்கொள்ள முயற்சித்தமையும், ஈராக் மீதான எண்ணெய் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள குவைத் வைத்தியசாலை தாதி என ஒருவரை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்க செனட் சபையில் பிழையான வாக்கு மூலம் அழித்து பிழையாக வழிநடாத்தியமை என ஏராளமான உதாரணங்கள் இக்குண்டு வெடிப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

அமெரிக்காவின் வெளி உறவுக்கொள்கை தொடர்பில் அமெரிக்கர்கள் சிந்திக்க வேண்டி உள்ளதை இத்தாக்குதல் சம்பவம் உணர்த்துகின்றது.

அமெரிக்காவின் நீதித்துறை இரட்டைக்கோபுர தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைக்காமல் போனதன் விளைவே இவ்வாரான தாக்குதலுக்கு காரணங்களாகும் என கருதுகின்றேன்.

எனவே இவ்வாரான மிலேச்சத்தனமாக அப்பாவி மக்களை காவு கொள்ளும் பயங்கரவாத தாக்குதலுக்கு முற்றுப்புள்ளீ வைக்க அமெரிக்க வெளி உறவு கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என கருதுகின்றேன்.

( அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று நடந்த மாராதான் போட்டியைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.

மாராதான் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த மாராதான் போட்டியில் சுமார் 16,000 பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். பாய்ல்ஸ்டன் தெருவில் இந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், அங்கு மக்கள் குவிந்திருந்தபோது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.

 

இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 137 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதல் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு நடத்திய சோதனையில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன. இந்தத் தாக்குதல் குறித்து எப்பிஐ விசாரணையை ஆரம்பித்துள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக செளதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைத் தேடுவதாக எப்பிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

 boston marathon attack kills injures double explosion