படத்தொகுப்பு

இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்?


Article By: Crep

இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு அரசார்பற்ற ஒன்றியங்களின் தலைவர் வீ.கமலதாஸ் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. விக்கிலீக்ஸ் ஏன் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான இரகசிய செய்திகளை வெளிடிடுகின்றது என்ற கேள்வி ஒருபுறம் வீ.கமலதாஸ் என்பவர் யார் என்பதனையும் தெளிவு படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. 

குறிப்பாக முஸ்லிம்களிடம் ஆயுதக்குழுக்கள் அல்லது அடிப்படைவாதக்குழுக்கள் இறுக்கின்றது என்ற கற்பனா வாதத்தை நிஜமாக்கும் முயற்சிகளில் அமெரிக்க சார்பு விக்கிலீக்ஸ் போன்ற நிருவனங்கள் மேற்கொண்டு வருவதனை கூர்ந்து அவதானிக்கும் போது தெறிந்து கொள்ள முடியுமாகவுள்ளது. 

இது இவ்வாறிருக்க வீ.கமலதாஸ் என்பவர் யார் என்ற கேள்வியும் விடைகாணப்படவேண்டியதே. சகோதரர் கமலதாஸ் ஒரு இந்துத்துவா என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு சுயநல பணப்பறி முதலையாகும்.

இந்திய இராணுவம் மட்டக்களப்பில் இருந்த காலப்பகுதிகளில் எல்லாம் தன்னை விடுதலை வீரராக கூறிக்கொண்டு இந்திய றோ பிரிவினருக்கு படுவான்கரையிலிருந்து புலிகளது செய்திகளை காவிக்கொடுத்ததுடன் புலிகளுக்கு தேவையான ஆலணியை திரட்டிக்கொள்ள பாடசாலைகளில் கல்வி பயின்ற மாணவர்களை மூலைச்சலவை செய்து இயக்கத்திற்கு அனுப்பி வைத்த பெருமையும் இவரையே சாரும். இக்காலப்பகுதியில் இருந்தே தமக்கு உயிர் அச்சுருத்தல் இருப்பதாக புரளிகளை கிளப்பி விட்டு அதனை தமக்கு சாதகமாக்கி கொள்ள முயற்சிக்கும் பலே கில்லாடி.

பின்னர் ஏற்பட்ட யுத்த காலப்பகுதியில் புலிகளுக்கு தேவையான ஆவணங்களை அறிக்கைகளை தயார்படுத்திக்கொடுக்கும் பணியினை சிரப்பாக செய்து முடித்ததன் காரணமாக அரச சார்பற்ற நிருவனங்களின் ஒன்றியமான இணையம் உருவாக்கப்பட்ட போது தலைவராகவும் ஆக்கப்பட்டார். அரசு புலிகள் அமைதிப்பேச்சுவார்த்தை காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட SHIRAN வேலைத்திட்டத்தில் புலிகள் சார்பான பிரதிநிதிகளில் ஒருவராக இவர் பெயரும் பறிந்துறைக்கப்பட்டது.

இணையம் தொடர்பான வேலைத்திட்டங்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வந்ததினால் மீண்டும் யுத்த சூழல் உருவான போது திருவாளர் கமலதாஸ் தனது கைப்பொம்மையாக செயற்பட்ட பிரசாந்தனை இணையத்தின் தலைவராக்கி நிழல் அரசை தொடர்ந்தார். சுனாமி கலப்பகுதியில் இந்திய சிவ சேனை அமைப்பு, இந்துக்கள் கிரிஸ்த்தவ மயமாக்களுக்கு உற்படுகின்றனர், இதனால் இந்துக்களின் குடிப்பரம்பலில் சரிவு ஏற்படுகின்றது என்ற பிரச்சிணை குறித்து கள ஆய்வுக்கு வந்த போது அதற்கு சிவ சேனை இயக்கத்தின் கிழக்கிற்கான அமைப்பாளராக இருந்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்.

குறிப்பாக சுனாமியினால் பாதிக்கப்பட்ட இந்துக்களை நிவாரணப்பணிகள் என்ற போர்வையில் கிரிஸ்தவர்களாக்கும் திட்டத்திணை முறியடிக்கவும் செயற்பட்டார். இதன் விழைவாக மட்டக்களப்பு மாவட்ட திகிழி வெட்டை பகுதியில் அமைந்துள்ள கிரிஸ்தவ தேவாலயம் மீது கைக்குண்டு தாக்குதல் அப்போது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இவரது உளவுப்பனியில் சந்தேகம் கொண்ட சிவசேன அமைப்பு இவரது இடத்திற்கு இணையத்தலைவர் செல்வேந்திரனை நியமிக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், சிவ சேனவின் ஒருங்கினைப்பாளராகவும் நியமித்தது. இதனால் செல்வேந்திரணை ஓரம் கட்டும் முயற்சியில் கமலதாஸ் ஈடுபட்டதுடன் அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு தகவல்களை வழங்குவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு பிரதிஇடாக அமெரிக்க நிறுவனங்களுடாக நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் தமக்கென ஒரு அரச சார்பற்ற நிருவனத்தையும் உருவாக்கி கொண்டார்.

நிதிவளங்களை தாமே சுருட்டிக்கொள்ளும் வகையில் அந்நிருவனத்தை தமது வீட்டிலேயே நடாத்தி அதற்கான வாடகையினையும் பெற்றுக்கொள்கின்றார். ஆங்கில மொழி பயிற்றுவிப்பதாக கூறிக்கொண்டு தானே ஆசிரியராக இருந்து அதற்கான தொகையையும் எடுத்துக்கொள்வது யாவரும் அறிந்த விடயமே. கடந்த பொதுத்தேர்தலில் ஜேர்மன் வழங்கிய காசுகளை சுருட்டிக்கொள்ள வேண்டி சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு தோழ்வியடைந்து தமிழ் மகளின் வாக்குகளை பிரித்துவிட முயற்சி செய்த துரோகத்தனம் தெரியாத ஒன்றல்ல. 

பணம் கொடுத்தால் எதனையும் வாங்கி விடமுடியும் என்பதற்கு உதாரணம் கமலதாஸ் என்பதில் ஐயம் இல்லை. இவர்களைப்போன்ற இனவாதம் பேசி குளிர்காயும் துரோகிகளை தமிழ் முஸ்லிம் சமூகம் நன்று விழங்கி கொள்ள வேண்டும்.