படத்தொகுப்பு

இது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..!


 

(அபூ முஸ்னா)

ஐந்து அல்லது அதற்கு மேல் பிள்ளைகளைக் கொண்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் கொடை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வரும் வெசாக் வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தாய்நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு (மவ்பிம சுரக்கீமே சங்விதானய) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின் முதற் கட்ட கொடை வழங்கும் பணி அவ்வாரம் ஆரம்பிக்கப்படும். இதற்காக ஐந்து அல்லது அதற்கு மேல் குழந்தைகளைக் கொண்ட 25 குடும்பங்கள் முதலில் தெரிவு செய்யப்பட்டு பணக் கொடுப்பனவு வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த இனத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில் மவ்பிம சுரக்கீமே அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்திற்கு இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் நிதி உதவி செய்துள்ளனர். தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். வரும் காலங்களிலும் செய்வதற்குக் காத்திருக்கின்றனர் என ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு மாதாந்தம் தொடர்ந்து 25 ஆயிரம் ரூபாய் கொடை வழங்கப்படும் எனவும் ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.