படத்தொகுப்பு

பயங்கரவாத பொதுபல சேனாவை உடன் தடைசெய்க – மேஜர் அஜித் பிரசன்ன


10926_500361316690939_785971144_n

அந்த சேனா, இந்த சேனா என கூறிக்கொண்டு தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து, நாட்டை அராஜகத்திற்கு இட்டுச்செல்ல, பொது பல சேனா திட்டம் தீட்டி வருகின்றது. இவ்வாறான கும்பல்கள் நாட்டில் செயற்படும்போது, நாம் எவ்வாறு இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியத்திற்கு இட்டுச்செல்ல முடியுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

பொது பலசேனா ஒரு பயங்கரவாத அமைப்பாகும். அதனை உடன் தடை செய்ய வேண்டுமென, அஜித் பிரசன்ன, தென் மாகாண கூட்டத்தில் குரல் கொடுத்துள்ளார். 

நாம் இன்று பிளவுபட்டுள்ளோம். இலங்கையில் உள்ள காவி உடை தரித்த சிலர், தேசிய ஐக்கியத்திற்காக குரல் எழுப்புவதில்லையென, பொது பல சேனா தெரிவிக்கின்றது. பொது பல சேனாவை உடன் தடை செய்ய வேண்டும். அதுவொரு பயங்கரவாத அமைப்பாகுமென, தென் மாகாண சபை கூட்டத்தில் அஜித் பிரசன்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements