படத்தொகுப்பு

ஜம்இய்யதுல் உலமா விடயத்தில் அசாத் சாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்


 

Ash Sheikh M.Z.M Shafeek (Bahji, Mazhaahiri)
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு  ஏற்பட்டுள்ள  இனப்  பிரச்சினை   விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஜமாஅத்தாக இயங்குபவர்களில் உலக ஆதாயங்களை  அறவே  எதிர்பார்க்காது  இதய  சுத்தியோடு  ஈடுபடுகின்ற   ஒரே  அமைப்பு  ACJU தான். 
ஆளும்  கட்சியை  எதிர்த்து  சவால்  விட்டுக்  கொண்டும்,அடிக்கடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும்  உரிமைக்காகப் போராடுவது அசாத் சாலி  போன்றோருக்கும் ஏனைய  அரசியல் வாதிகளுக்கும் தான்  பொருந்தும். கட்டாயம் அவ்வாறு   அசாத் சாலி போன்று  துணிச்சலாக   பேசுபவர்களும்  சமூகத்துக்கு  தேவை  தான். 
அதனையிட்டு  அவரை பாராட்டவும் வேண்டும். அதற்காக  ACJU வையும்  அசாத்  சாலி  போராடுவது போன்றோ,  அல்லது சில இனவாத கட்சிகளில் அங்கம் வகிக்கும்  பிக்குகள்  நடந்து  கொள்வது  போன்றோ  களத்தில்  இறங்கி  பரபரப்பை  ஏற்படுத்த  வேண்டும்  என  எதிர்  பார்ப்பது  முட்டாள்  தனம். 
உலமாக்களை  பொறுத்த வரை  ஆத்மீகம்  உள்ளிட்ட  பல  விடயங்களில் மக்களை  நேர்வழிப்  படுத்தும்  கடப்பாடு  உள்ளவர்கள்  அவர்கள். நாளை  மிம்பர்  படியை  அவர்கள்  மிதிக்கும்  போது மக்கள் அவர்களை  கண்ணியமாக  ஏற்க  வேண்டும். அவர்கள்  உணர்ச்சிவசப்பட்டோ, அதிரடி  நடவடிக்கைகளில் ஈடு பட்டோ சமூகத்தில் தமக்கு இருக்கின்ற   கண்ணியத்தை  இழக்கும் போது அவர்கள்  எமது சமூகத்துக்கு எந்த  நலவைக் கொண்டு சென்றாலும் சமூகம் அதனை அங்கீகரிக்காது என்பதோடு நில்லாது  அதனால் ஏற்படுகின்ற விளைவு முஸ்லிம் சமூகத்தைத் தான் மென் மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்லும்.   
எனவேதான்  அதனை தெளிவாகப் புரிந்து கொண்ட ACJU தடால் படால்கள் இன்றி  மிகவும் முதிர்ச்சியுடன்  காய்  நகர்த்திக்  கொண்டிருக்கிறது.  நாம் அறிந்த வரை அரசாங்கத்தின்  ஒப்புதல்  உடனேயே  இனவாதிகள்  முஸ்லிம்களுக்கு  எதிராக  செயற் படுகிறார்கள்   என்பதை  ACJU வும்  நன்றாகவே  புரிந்து  வைத்திருக்கக் கூடும். அரசாங்கத்துக்கு  அடிபணிந்து, அதன் கைப்  பிள்ளையாவது  என்பது வேறு. அரசாங்கத்தை  பகைத்து  பிரச்சினைப்  படுத்திக் கொள்ளாது  முஸ்லிம் சமூகத்தை இக்கட்டில் இருந்து விடுவித்து  உரிமைகளை  அடைய  காய்  நகர்திச்  செல்வது  என்பது வேறு. இதில்  இரண்டாவதை  தான்  ACJU செய்து  வருகிறது.  
மிகவும்  பொறுப்பும் கண்ணியமும்  வாய்ந்த, ஆத்மீக ரீதியாக முஸ்லிம்களை வழி நடாத்திச் செல்கின்ற அமைப்பொன்று பயணிக்க வேண்டிய பாதை எதுவோ அதே பாதையை தான் ACJU வும் தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது. 
எனவே  மடத்தனமாக  அரசாங்கம்  வைக்கும்  பொறிக்குள்  போய் மாட்டிக்  கொள்வதற்கு  ACJU வில்  உள்ளவர்கள்   முட்டாள்கள்  அல்ல. ஆகவே   அசாத்  சாலி,  ACJU வும்  தனது  பாணியிலேயே    போராட  வேண்டும்  என  எதிர்  பார்க்கக் கூடாது. அவர்  ACJU வை  ஊடகங்களில்  அடிக்கடி  விமர்சிப்பதை  உடன் நிறுத்திவிட்டு  தனது  பாணியில்  பயணிக்க  வேண்டும். 

 

Advertisements