படத்தொகுப்பு

பொதுபல சேனா பயங்கரவாத இயக்கம்: தென்மாகாண சபையில் மசோதோ


southதென் மகாகாண சபையில் பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு. அதனை தென் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா ஒன்றை தான் முன்வைக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரியங்க தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறு அஜித் பிரியங்க நேற்றைய சபை அமர்வின்போது உரையாற்றினார்.

கடந்த 30 ஆண்டுகள் நாம் இனங்களோடு முரண்பட்டு பல துன்பங்களை அனுபவித்து வந்தோம். மீண்டும் பொதுபல சேனா அர சேனா, மே சேனா எனச் சொல்லிக்கொண்டு பெரும்பான்மைச் சிங்கள மக்கள் முன்வந்து இனவாதமும் துவேஷமான குரோதங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே மோதல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பயங்கரவாத இயக்கம் என என்னால் முன்வைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு தெண்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர் அஜித் உரையாற்றினார்.

-அஷ்ரப் ஏ சமத்