படத்தொகுப்பு

சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு, பொருத்தமற்ற ஒன்றாகும் – ஹெல உறுமய


 omal_CI(Na)நாட்டிலுள்ள சகல விஹாரைகளிலும் ஹலால் பொருட்களை கொண்டு வருவது முழுமையாகத் தடை என்ற அறிவித்தல் ஒட்டப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் கூறினார். ஜாதிக ஹெல உறுமயவின் உப அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனம் புளத்சிங்களவில் நடாத்திய மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அங்கு தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, ஹலால் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஹலாலை நீக்கியிருந்தால் தற்போது சந்தைக்கு வரும் ஹலால் சின்னத்தை கறுப்புக் கோடு ஒன்றின் மூலம் வெட்ட வேண்டும். ஆனால், அவ்வாறு வெட்ட முடியாது. ஒரு தொழிற்சாலையில் ஹலால் உற்பத்தி, ஹலாலற்ற உற்பத்தி என உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும் பொய். சில பௌத்த பிக்குகளும் சில அமைச்சர்களும் இதில் ஏமாந்துள்ளனர். அந்த பொய்யில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நாம் ஹலாலுக்கு எதிரானவர்களல்ல. அது இஸ்லாத்திலுள்ள ஒன்று. அவர்கள் அதனைச் செய்து கொள்ள வேண்டும். சில அமைச்சர்கள் கூறுவது போன்று பிரச்சினையாக இல்லாவிட்டால் முஸ்லிம்களது கத்னா செய்வதும் அப்படித்தான். எமது நம்பிக்கைப்படி சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு பொருத்தமற்ற ஒன்றாகும். எமது சிலர் சொல்வது போன்று சுன்னத் செய்யும் வரை நாமும் ஆடைகளை அகற்றிக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஹலால் என்பது அரச அதிகாரத்திலுள்ள சதி, பலவந்தம் நாம் ஹலாலை எதிர்கவில்லை. பலவற்றுக்கும் ஏமாற்றப்படுவதற்கும் நாம் இணங்கவில்லை.

Advertisements