படத்தொகுப்பு

சிறுவனை துஷ்பிரயோகம் புரிந்த பௌத்தபிக்கு போராசிரியருக்கு விளக்கமறியல்


1

பாளி பெளத்த பல்கலைக்கழகத்தின் பிரதான விரிவுரையாளரும் , பேராசிரியருமான பிக்கு ஒருவர் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற  சந்தேகத்தின் பேரில் கைது செய்து இன்று 12-04-2013  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.  
இதனை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லலித் அபேசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். (vi)

 

Advertisements