படத்தொகுப்பு

மலாலாவின் வாழ்க்கை புத்தகமாகிறது: 45 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம்


malala

 பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகப் போராடிய மலாலா யூஸுப்பின் (15) வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் வெளியாகவுள்ளது. இந்த நூலின் வெளியீட்டு உரிமையைப் பெற இங்கிலாந்தின் வெயிடென்பெல்ட் அன் நிகல்சன் என்ற பதிப்பகம் 45 கோடி ரூபாவுக்கு மலாலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பிரசாரம் செய்த போது தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகிய மலாலா உயிருக்குப் போராடிய நிலையில் இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பூரண சுகமடைந்துள்ள மலாலா பேர் மிங்ஹாமில் பாடசாலையொன்றுக்கு கடந்த 18 ஆம் திகதி முதல் செல்கிறார்.

நான் மலாலா என்ற இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குறித்த பதிப்பகம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மலாலா குறிப்பிடுகையில், எனது நூல் உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் என நம்புகின்றேன். ஒரு சிறுமி கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். இது என்னுடைய கதை மட்டுமல்ல. கல்வி வசதிகளைப் பெறாத 61 மில்லியன் குழந்தைகளின் கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்

Advertisements