பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :


ஒரு பெண்ணிற்கு பொருத்தமான கணவனைத் தேர்வு செய்கின்ற அதிகாரத்தை அவளுக்குக் கொடுப்பது என்பது அவள் விரும்புகின்ற யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதனால் அவளுடைய சொந்தக்காரர் களுக்கும் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டாலும் சரிதான் என்ற பொதுவான அனுமதி அவளுக்கு இல்லை. ஆனால் அவளை கண்காணித்து அவளுக்கு அவளுடைய அதிகாரி வழிகாட்டும் விதத்தில் அவளுடைய தேர்வு இருக்கவேண்டும். அவர்தான் அவளுடைய திருமண ஒப்பந்ததை நடத்திவைக்கவேண்டும். அவள் தானாக நடத்திக் கொள்ள முடியாது. அப்படியே அவள் தானாக நடத்திக் கொண்டால் அத்திருமணம் செல்லாது.

”எந்தப்பெண், அதிகாரி இன்றி தன் திருமணத்தை நடத்திக் கொள்கிறாளோ அத்திருமணம் செல்லாது! செல்லாது!! செல்லாது!!!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
மேலும்’ ஒரு ஹதீஸ், ”அதிகாரியின்றி எந்த திருமணமும் செல்லுபடியாவதில்லை.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூற்கள்: நஸயீ, அப+தா¥த்)
அதிகாரி இல்லாமல் திருமணம் செய்வது கூடாது, என்பதை இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கின்றன. கூடாது என்று ஹதீஸில் வந்திருப்பதன் பொருள். திருமணம் செல்லுபடியாகாது என்பதாகும்.
இமாம் திர்மிதி கூறுகிறார்: இதன் அடிப்படையில் தான் உமர், அலீ, இப்னு அப்பாஸ், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்களிலுள்ளஅறிஞர்கள் செயல் பட்டுள்ளனர். இவ்வாறே தாபியீன்களில் உள்ள அறிஞர் களும் ”அதிகாரியின்றி திருமணம் இல்லை” என்று கூறினார்கள். இதுவே இமாம் ஷாஃபியீ, இமாம் அஹ்மதின் கருத்துமாகும். (முக்னி 6:449)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s