பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ


பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள்

1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான சில விதிமுறைகள் உள்ளன. அவை,
1. முஸ்லிமாக இருக்கவேண்டும்.
2. பைத்தியமல்லாது சீரிய சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
3. சுதந்திரமான நிலையில் இருக்கவேண்டும்.
4. பருவ வயதை அடைந்திருக்கவேண்டும்.
5. மக்கா வரை சென்று திரும்பும் அளவிற்கு பொருளா தார (மற்றும் உடல் வலிமை) வசதியாக இருக்க வேண்டும்.
பெண்களைப் பொறுத்தவரை அவளுடன் துணை யாகச் செல்லக்கூடிய திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண் இருக்கவேண்டும். அதாவது கணவன், தந்தை மகன், சகோதரன் போன்றவர்கள், அல்லது பால்குடி சகோதரன், தாயின் கணவன் அல்லது கணவனின் மகன் போன்றவர்கள் உடன் இருக்கவேண்டும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்யும் போது, திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட ஆண் அவளுடன் இருந்தேயன்றி எந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. தனக்குத் திருமண உறவு தடுக்கப்பட்டுள்ள ஆண் துணையின்றி எந்த ஒரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்யக்கூடாது.’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத் தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறாள். நானோ இன்ன யுத்தத்தில் பங்கெடுப் பதற்காக உள்ளேன்.’ எனக் கேட்டார். அதற்கு, ‘நீ சென்று உன் மனைவியுடன் ‘ஹஜ்’ செய்துகொள்!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாக்ள்” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண், திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபர் துணையின்றி மூன்று நாட்கள் பயணம் செய்யக்கூடாது. என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறே ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வ தைத் தடை செய்கின்ற நபிமொழிகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் பெண்ணைப் பொறுத்தவரை பலவீனமான வள். பயணத்தின்போது பல சிரமங்கள் உள்ளன. இதை ஆண்கள் தாங்கிக் கொள்வர். பெண்ணைத் தீயவர்கள் பெரும்பாலும் ஓர் ஆசைப் பொருளாகவே கருதுகிறார் கள். இதனால் அவளுக்கு ஆபத்துகள் நேரக்கூடும். இந் நிலையில் அவர்களுக்குத் துணையாக ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.
ஹஜ்ஜிற்காகப் பெண்ணுடன் செல்பவர், திருமண உறவு தடுக்கப்பட்ட முஸ்லிமாக, பருவமடைந்தவராக, பைத்தியம் போன்றவையன்றி, அறிவுடையவராக இருக்கவேண்டும். ஏனெனில், இறைமறுப்பாளரிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட தகுதிகளில் எவரும் துணை யாகக் கிடைக்காத பட்சத்தில் அவளுக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்வது அவளுக்குக் கடமையாகும்.
2. உபரியான ‘ஹஜ்ஜை மேற்கொள்வதாக இருந்தால் கணவனின் அனுமதியைப் பெறவேண்டும்.
கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் பாதிப்புகள் நிகழாதிருக்கவே இவ்வாறான சட்டம் உள்ளது.
”உபரியான ஹஜ்ஜை மேற்கொள்வதை விட்டும் மனைவியைத் தடுக்கின்ற உரிமை கணவனுக்கு இருக்கி றது” என முக்னீ என்ற நூலில் 3ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.
அறிஞர் இப்னுல் முன்திர் குறிப்பிடுகிறார்.
”நான் அறிந்த மார்க்க அறிஞர்கள் எல்லோருமே உபரி யான ஹஜ்ஜிற்காக ஒரு பெண் வெளியே செல்வதை தடுப்பதற்குரிய அதிகாரம் கணவனுக்கு உண்டு; கணவனுக் குள்ள உரிமைகளை நிறைவேற்றுவது மனைவியின் மீது கடைமையாகும். கடமை அல்லாத ஒன்றிற்காக கடமையை மீறலாகாது” அடிமைக்கும் எஜமான னுக்கு மிடையிலும் இதே சட்டம் தான் எனக் கூறி யுள்ளனர்.
3. ஹஜ் மற்றும் உம்ராவை ஆண்களுக்குப் பகரமாக ஒரு பெண் நிறைவேற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 26ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்.
மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்குப் பதிலாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம் எனக் கூறியுள்ளனர். அது அவளுடைய மகளாகவும் இருக்கலாம். மகள் அல்லாமலும் இருக்க லாம். இவ்வாறே ஓர் ஆணுக்குப் பதிலாக ஒரு பெண் ஹஜ் செய்வதும் கூடும். நான்கு இமாம்கள், மற்றும் அறிஞர்கள் அனைவரும் இவ்வாறே கூறியுள்ளனர்.
கத் அம் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் தன் தந்தைக்குப் பதிலாக ஹஜ் செல்வதற்கான அனுமதியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளுக்கு அளித்தார்கள். அப்பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தையின் மீது ஹஜ் செய்வது கடமையாகியுள்ளது. அவரோ வயோதியராக இருக்கிறார் (நான் என்ன செய்வது) எனக் கோரி னார், அப்போது அவருக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு அவளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை யிட்டார்கள்.
பெண்ணுடைய இஹ்ராமை விடவும் ஆணுடைய இஹ்ராம் பூரணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. ஒரு பெண் ஹஜ்ஜிற்குச் செல்லுகின்ற வழியில் அவளுக்கு மாதவிடாய் அல்லது பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதற்காக அவள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை, இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மை நிலையில் உள்ள பெண்களைப் போன்று இஹ்ராம் நிய்யத்து வைப்பாள். ஏனெனில் நிய்யத்திற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அவளுக்கு இல்லை.
முக்னீ என்ற நூலில் 3ழூ ழூ293, 294 ல் ”இஹ்ராம் நிய்யத்தின் போது ஆண்களுக்கு குளிப்பது எவ்வாறு சுன்னத்தோ அதைப் போன்றே பெண்களும் குளிப்பது சுன்னத்தாகும். மாதவிடாய் மற்றும் பிரசவம் பெண்களின் விஷயத்தில் அது மிகவும் ஏற்றமானது. இஹ்ராம் என்பது ஒரு வணக்கமாகும். எனவே மாதவிடாய் மற்றும் பிரசவப் பெண்களும் குளிப்பது அவசியம். இதற்குத் தெளிவான ஆதாரம் உள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.
துல் ஹுலைதஃபா என்ற இடத்திற்கு நாங்கள் வந்தோம். அப்போது, அஸ்மா பின்த் உமைஸ் என்பவர் பிரசவமானார். அவர்கள் முஹம்மத் இப்னு அபீபக்கர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒருவரை அனுப்பி, ‘நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுவருமாறு’ வேண்டினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீ குளித்துவிட்டு (மர்ம உறுப்பில்) ஒரு துணியை கட்டிக் கொண்டு இஹ்ராம் அணிந்துகொள்!’ என்று கூறினார்கள்கி என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ம்பிரசவமானவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிந்து தவாஃபைத் தவிர அதன் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்கி என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
”ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாயாகி இருந்த போது ஹஜ்ஜிற்கு இஹ்ராம்ஆடையை அணிவதற்காக குளிக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.”
மாதவிடாய் மற்றும் பிரசவமான பெண்கள் இஹ்ராம் ஆடையை அணியும் போது குளிப்பது ஏற்றம். என்று கூறப்பட்டுள்ளதன் நோக்கம் தூய்மையாக இருக்கவேண்டும்; வெறுக்கத்தக்க வாடையின் மூலம் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இஹ்ராம்ஆடை அணிந்த நிலையில் பெண்களுக்கு மாதவிடாய், பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதனால் இஹ்ரா மிற்கு எந்தப் பாதிப்புமில்லை. அவர்கள் தங்கள் இஹ்ராமி லேயே இருக்கவேண்டும். இஹ்ராம் மூலம் தடுக்கப்பட்ட வற்றிலிருந்து விலம் இருக்கவேண்டும். மாதவிடாய், பிரசவத் தீட்டிலிருந்து தூய்மையாகி குளிக்கும் வரை தவாஃப் செய்வது கூடாது. ‘தமத்துவு’ என்ற ஹஜ்ஜின் வகையை நிறைவேற்றுவதாக எண்ணி உம்ராவிற்கு இஹ்ராம்ஆடை அணிந்து அரஃபா நாள் வரும் வரை தூய்மையாகவில்லையானால் அவள் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் நிய்யத்து வைக்க வேண்டும். அந்த ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து ஒரே இஹ்ராமில் ஹஜ் உம்ராவை செய்துவிடவேண்டும். அப்போது ‘ம்ரான்’ என்ற ஹஜ்ஜின் வகையைச் செய்தவர்களாக ஆம் விடுவார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது .
”உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்த நிலையில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அந்நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். (அதைப் பார்த்து) ”நீ ஏன் அழுகிறாய், உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கு, ‘ஆம்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதிலளித்தார். இது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும். எனவே ஹாஜிகள் செய்கின்ற எல்லா கிரியைகளையும் நீ செய்துகொள்! ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” என்பதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அழுது கொண் டிருப்பதைக் கண்டு, உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.’ மக்கள் எல்லாம் இஹ்ராம் நிலையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நானோ விடு படவில்லை. கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை. மக்கள் அனைவரும் ஹஜ்ஜின் கடமையைச் செய்வதற் காக புறப்பட்டுச் செல்கிறார்கள்’ எனக்கூறினார். இது அல்லாஹ் ஆதமுடைய பெண் மக்களின் மீது விதித்தது தான். எனவே நீ குளித்து விட்டு திரும்ப இஹ்ராம்ஆடை அணிந்துகொள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் கள். அவ்வாறே அவர்கள் செய்தார்கள். நிற்க வேண்டிய எல்லா இடங்களிலும் நின்றார்கள். சுத்தமான பின்பு கஅபாவை ‘தவாஃப்’ செய்து, ஸஃபா மர்வா மலைக்கி டையில் சயீ எனும் தொங்கோட்டம் ஓடினார்கள். அதன் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவிடம், நீ உன்னு டைய ஹஜ் மற்றும் உம்ராவை முடித்து இஹ்ராமிலிருந்து விடுவிக்கப்பட்டவளாம் விட்டாய்! எனக் கூறினார்கள்.
‘தஹ்தீபுஸ்ஸுனன்’ என்ற நூலில் 2ழூ ழூ303ல் இப்னுல் கையிம் குறிப்பிடுகிறார்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் நிய்யத்து வைத்தார்கள். பின்னர் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது ஹஜ்ஜிற்கான எண்ணத்தை (நிய்யத்தை) வைத்துக் கொள்ளும் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை யிட்டார்கள். இதன் மூலம் அவர்கள் ‘ம்ரான்’ என்ற ஹஜ் வகையைச் செய்தவர்களானார்கள். எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் நீ கஅபாவை ‘தவாஃப்’ செய்து ஸஃபா மற்றும் மர்வா மலைக் கிடையில் ஓடினால் அது உன் ஹஜ்ஜிற்கும், உம்ராவிற்கும் போதுமானதாகும்கி என்று கூறினார்கள்.
5. இஹ்ராம் நிய்யத்து வைக்கும் போது பெண்கள் செய்யவேண்டியவை:
இஹ்ராம் நிய்யத்து வைத்த நிலையில் ஆண்கள் எதையெல்லாம் மேற்கொள்ள வேண்டுமோ அதை யெல்லாம் பெண்களும் மேற்கொள்ள வேண்டும். குளித்தல், சுத்தம் செய்தல், முடியைக் களைதல், நகம் வெட்டுதல், கெட்ட வாடையைப் போக்குதல் போன்ற செயல்களைச் செய்யவேண்டும். ஏனெனில் இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் இதுபோன்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இவை அவளுக்கு அவசியமில்லை என்றாலும் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது இஹ்ராம் சம்பந்தப் பட்ட செயல்களில் உள்ளவையும் அல்ல. இஹ்ராம் அணியும்போது அவள் தன் உடம்பில் அதிகம் வாடை வீசாத வாசனைப் பொருட்களைப் ப+சிக் கொள்ளலாம்.
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜிற்குச் சென்றோம். இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில், எங்கள் நெற்றியில் கஸ்தூரி மணப்பொருளைத் தடவுவோம். எங்களில் ஒருத்திக்கு வியர்வை ஏற்பட்டால் அவளுடைய முகத்தில் கஸ்தூரி வடியும். அதைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எங்களைத் தடுக்கவில்லை.” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 5ழூ ழூ12 ல் குறிப்பிடுகிறார்.
கஸ்தூரி வடிவதைப் பார்த்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக இருந்தது அது அனுமதிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அது தவறாக இருக்குமானால் அதைப் பார்த்து விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய்மூடி இருக்க மாட்டார்கள்.
6. ”இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மறைத்திருப்பது கூடாது, இரண்டு கண்கள் மட்டும் தெரியும் விதத்திலுள்ள முகமுடியால் முகத்தை மூடுவதும் கூடாது. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்துள்ளார்கள்.” (நூல்: புகாரி)
கை உறைகளையும் அணியக் கூடாது. அன்னிய ஆண்கள் பார்க்கும் போது முகமுடி அல்லாத துணியால் முகத்தை மூடிக் கொள்ளலாம், கை உறை அல்லாத துணிகளால் முன்கையையும் மறைத்துக் கொள்ள்லாம், காரணம் அன்னிய ஆடவர்களை விட்டும் முகம் கைகளை இஹ்ராமின் போதும் மற்ற நேரத்திலும் மறைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார்.
”பெண் தன்னை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடியவளாவாள். எனவே அவள் அணிந்திருக்கிற ஆடையையே இஹ்ராமின்போதும் அணிந்து கொள் ளலாம். ஆனால் அவள் முகத்தை மறைப்பதையும், கை உறைகள் அணிவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒரு பெண் தன் முகத்தைத் தொடாத விதத்தில் அதை மறைத்துக் கொள்வது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முகத்தைத் தொடும் விதத்தில் இருந்தாலும் அதுவும் அனுமதிக்கப்பட்டது தான் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தன் முகத்தை மூடும் துணி முகத்தில் படாமலிருப் பதற்காக குச்சிகள், கைபோன்றவற்றால் மறைப்பது தேவையற்றதாகும். முகம் மற்றும் நகைக்கு இடையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமப்படுத்தித்தான் கூறியுள்ளார்கள். கையும் முகமும் ஆண்களின் உடம்பைப் போன்றதுதான், தலையைப் போன்றதல்ல.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் இஹ்ராமின் போது முகத்தைத் தொடும்படியான திரையை (அன்னிய ஆண்கள் முன்னிலையில்) தொங்கவிட்டுள்ளார்கள்.
‘பெண்ணின் இஹ்ராம் அவளுடைய முகத்தில் இருக்கிறது.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக எந்த அறிஞரும் அறிவிக்கவில்லை. இது சில முன்னோர்களின் கூற்றாகும்.
இப்னுல் கையிம் அவர்கள் தஹ்தீபுஸ் ஸுனன் என்ற நூலில் 2ழூ ழூ350 ல் கூறுகிறார்கள்.
பெண்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது தங்கள் முகத்தை அவசியம் திறந்து வைக்கவேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஒரு எழுத்துக்கூட அறிவிக்கப் படவில்லை. துவாரமிடப்பட்ட முகத்திரையை அணி வதைத்தான் தடை செய்துள்ளார்கள்.
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா இஹ்ராம் அணிந்திருந்தபோது தன் முகத்தை மறைத்திருந்ததாக ஹதீஸில் வந்துள்ளது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது எங்களைக் கடந்து ஒரு வாகனக் கூட்டம் சென்றது. நாங்களோ இஹ்ராம் அணிந்திருந்தோம். அப்போது நாங்கள் எங்கள் முகத்தை தலையிலுள்ள துணியால் மறைத்துக் கொள்வோம். அக்கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் முகத்தைத் திறந்து கொள்வோம்.” (நூல்: அபூ தாவூது)
எனவே இஹ்ராம் அணிந்த இஸ்லாமியப் பெண்ணே நீ அறிந்துகொள்!
முகத்திற்க்கும், கைகளுக்கும் என்று சொந்தமாக தைக்கப்பட்ட துணிகளால் முகத்தை மறைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கை உறைகளை அணிவதும் தடுக்கப் பட்டுள்ளது. பிற ஆண்களின் பார்வையை விட்டும் உன் முகம் கைகளை மறைப்பது கடமையாகும். முகத்தைத் தொடாமலிருக்கும் துணியை அணிவதற்காக எதையாவது குச்சி அல்லது தலைப்பாகை போன்றவற்றை வைப்பதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை.
7. பெண்கள் இஹ்ராம் அணியும்போது சாதாரண பெண்கள் அணிகின்ற ஆடம்பரமில்லாத ஆடையில் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையோ, உறுப்புக்களை வெளிப் படுத்திக் காட்டக்கூடிய இறுக்கமான ஆடைகளையோ ஒழுங்காக மறைக்காத விசாலமான ஆடைகளையோ, கால்கள் கைகள் வெளியே தெரியும் விதத்திலான குட்டையான ஆடைகளையோ அணியக் கூடாது. அது விசாலமானதாக, கட்டியானதாக இருத்தல் வேண்டும்.
இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள். ”பெண்களைப் பொறுத்தவரையில் இஹ்ராமின்போது சட்டை, மேல் அங்கி, பைஜாமா, தலையையும், மார்பையும் மறைக்கும் பர்தா, கால் உறை ஆகியவை அணிவது அனுமதிக்கப்பட்டதாகும் என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். (முக்னி 3ழூ ழூ328)
பச்சை நிறம் போன்ற குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணியவேண்டும் என்பதில்லை. சாதார ணமாக பெண்கள் அணிகின்ற சிகப்பு, பச்சை, கருப்பு போன்ற எந்த நிறமுள்ள ஆடையை வேண்டுமானாலும் பெண்கள் அணிந்து கொள்ளலாம். தேவைப்படும்போது ஆடைகளை மாற்றிக் கொள்வதும் அவளுக்கு அனுமதிக் கப்பட்டுள்ளது.
8. இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் தனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் தல்பியா சொல்வது சுன்னத்தாகும்.
இப்னு அப்துல் பர்ரி கூறுகிறார்: பெண்கள் தங்கள் சப்தத்தை உயர்த்தி தல்பியா சொல்லாமல் இருப்பதுதான் அவர்களுக்குச் சுன்னத்தாக இருக்கிறது என்றும், மேலும் அவள் தனக்கு மட்டும் கேட்கும்படி அதைக் கூற வேண்டும் என்றும் அறிஞர்கள் ஏகோபித்துக் கூறுகின்றனர். ஏனெனில் பெண்கள் சப்தத்தை உயர்த்திக் கூறுவதால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் சப்தமிட்டு ஆண்களைப் போன்று பாங்கு இகாமத் சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. தொழுகையில் இமாம் தவறு செய்யும் போது ஆண்களைப் போன்று தஸ்பீஹ் சொல்லாமல் கையின் மேல் தட்டவேண்டும் என்பது பெண்களுக்கு சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. (அல்முக்னி 2ழூ ழூ330,331)
9. பெண்கள் தவாஃப் செய்யும்போது, உடலை முழுமையாக மறைக்கவேண்டும்.
சப்தத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்வை யைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். ஆண்களுடன் நெரிச லில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக ‘ஹஜருல் அஸ்வத், ருக்னுல்யமானி பக்கம் செல்லும்போது கவனம் தேவை. நெரிசலுடன் கஃபாவை நெருங்கி செய்வதை விட நெரிசல் இல்லாத தூரமான இடத்திலிருந்து தவாஃப் செய்வதுதான் பெண்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில் நெரிசலில் ஈடுபவடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல குழப்பங் கள் ஏற்படுகின்றன. கஅபாவிற்கு அருகில் செல்வதும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் முடிந்தால் செல்வது தான் சுன்னத்தாக இருக்கிறது. ஒரு சுன்னத்தை நிறை வேற்றுவதற்காக தடுக்கப்பட்ட செயலைச் செய்யக் கூடாது. இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் விஷயத்தில் அது சுன்னத்தாகவே கருதப்பட மாட்டாது. நெரிசலின் போது அந்த கல்லின் பக்கம் வரும் நேரத்தில் தன்கையால் சுட்டிக் காட்டினால் போதுமானது.
இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ37ல் கூறுகிறார்கள்.
தோழர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது அவர்களுக்கு உகந்ததல்ல. இரவிலும் மற்ற நேரங்களில் மக்கள் அதிகமாக இல்லாத நேரத்திலும் தவாப் செய்யும் இடம் காலியாக இருந்தாலே தவிர அந்தக்கல்லைத் தொடுவதும் உகந்ததல்ல. இதனால் அந்தப் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது.
முக்னி என்ற நூலில் 3ழூ ழூ331 ல் கூறப்பட்டுள்ளது. பெண்கள் இரவு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்வது அவர்களுக்கு சிறந்தது. ஏனெனில் அந்நேரத்தில்தான் அவர்கள் மறைவாகவும் நெரிசல் இல்லாமலும் தவாஃப் செய்யவும், ஹஜருல் அஸ்வதைத் தொடவும் முடியும்.
10. முக்னி என்ற நூலில் 3ழூ ழூ394 ல் கூறப்பட்டுள்ளது. பெண்களுடைய தவாஃபையும் ஸயீயையும் பொறுத்த வரையில் எல்லா சுற்றிலும் நடந்தே செல்லவேண்டும்.
இப்னுல் முன்திர் கூறுகிறார்: தவாஃப் செய்யும் போதும், ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடும் போதும் ஆண்களைப் போன்று தங்கள் உடம்பைக் குலுக்கி வேகமாக நடக்க வேண்டும் என்பது கிடையாது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தவாஃபின்போது புஜத்தைத் திறந்து வீரத்தை வெளிப்படுத்தி வேகமாகச் செல்லவேண்டும் என்பது ஆண்களுக்குத்தானே தவிர பெண்களுக்கு அல்ல. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
11. ஹஜ்ஜின்போது மாதவிடாய்ப் பெண்கள் கடை பிடிக்கவேண்டியவை.
மாதவிடாய்ப் பெண் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிதல், அரஃபா மைதானத்தில் நிற்குதல், முஸ்தலிபா வில் இரவு தங்குதல், ஜம்ரத்தில் கற்களை ஏறியுதல் போன்ற எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். தவாஃப் மட்டும் செய்யக்கூடாது. தூய்மையான பின்பு தவாஃப் செய்யவேண்டும்.
மாதவிடாயாக இருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஹாஜிகள் செய்கின்ற எல்லாவற்றை யும் நீ செய்துகொள்! சுத்தமாகும் வரை கஅபாவை தவாஃப் மட்டும் செய்யாதே! என்று கூறினார்கள்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் ”ஹாஜிகள் நிறை வேற்றுகின்ற எல்லாச் செயல்களையும் நீ செய்துகொள்! குளிக்கும் வரை தவாஃப் செய்யாதே!” என்று கூறியதாக உள்ளது. (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷவ்கானி நைலுல்அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ49 ல் கூறுகிறார்.
மாதவிடாய்ப் பெண் இரத்தம் நின்ற பின்பு குளிக்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதை இந்த நபிமொழி அறிவிக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிற காரணத்தி னால் இத்தடையை யாராவது மீறி தவாஃப் செய்தால், அது வீணாம்விடும்.
ஸஃபா மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டமும் ஓடக்கூடாது. ஏனெனில் கடமையான ஹஜ்ஜின் தவாஃப் செய்தப்பின்னரே ஸயீ செய்வது கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃப் செய்தபின்னர்தான் ஸயீ செய்துள்ளார்கள்.
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ82 ல் கூறுகிறார்கள்.
ஒருவர் தவாஃப் செய்யும் முன்பாக ஸயீ செய்தால் அவரின் ஸயீ ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறுதான் அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர். இதில் கருத்து வேறுபாடு இல்லை என ‘மாவர்தீ’ என்பவர் கூறியுள்ளார். இவ்வாறே இமாம்களான மாலிக், அபூ ஹனீஃபா, அஹ்மத், ஆகியோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் முன்திர், அதாவு மற்றும் சில ஹதீஸ் கலை அறிஞர்களைத் தொட்டும் (தவாஃப் முன்பு ஸயீ செய்வது) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் என்னவென்றால் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃப் செய்தபின்னரே ஸயீ செய்தார்கள். மேலும் ”என்னிடமிருந்துதான் உங்களின் ஹஜ் கிரியைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காகச் சென்றேன். சில மக்கள் அவர்களிடத்தில் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! தவாஃப் செய்யும் முன்பே நாங்கள் ஸயீ செய்துவிட்டோம்’ என்றனர். இன்னும் சிலர் ‘நாங்கள் முற்படுத்தி விட்டோம்’; நாங்கள் பிற்படுத்தி விட்டோம் என பலவாறு கூறப்பட்ட போதெல்லாம், குற்றம் இல்லை. ஒரு முஸ்லிமின் மானத்தை அநியாயமாக பங்கப்படுத்தியவன்தான் நாசமாவான் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும்போது மட்டுமே அவன் அநீதி இளைத்தவனாக ஆகிறான். அவன்தான் நாசமாம் குற்றமிளைத்தவன்.’ என்று கூறினார்கள்” என இப்னு ஷுரைஹ் (ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
இங்கே தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்தேன் என்பதின் பொருள், மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபிற்குப் பின்னர் ஹஜ்ஜின் தவாஃபிற்கு முன் ஸயீ செய்தேன் என்பதாகும் என கத்தாபி தெரிவித் துள்ளார்.
முஹம்மத் அமீன் »ன்கீதி தம் திருக்குர்ஆன் விளக்க வுரையான ”அள்வாவுல் பயான்” என்ற நூலில் 5ழூ ழூ252 ல் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளதாவது தவாஃபிற்குப் பின்னரே அல்லாமல் ஸயீ செய்வது கூடாது. தவாஃப் செய்வதற்கு முன்னர் ஸயீ செய்தால் அது கூடாது. நான்கு இமாம்களும் மற்றவர்களும் இவ்வாறே கூறி யுள்ளனர். இது அனைவரின் ஏகோபித்த முடிவு என மாவர்தியும், மற்றவர்களும் கூறியுள்ளனர். பின்னர் முன்பு நாம் குறிப்பிட்ட இமாம் நவவியின் கருத்தை இங்கு குறிப்பிடுகிறார்.
இப்னு ஷீரைக்கின் ஹதீஸிற்குரிய பதிலையையும் குறிப்பிடுகிறார். பின்னர் குறிப்பிடுகிறார். ”நான் தவாபு செய்வதற்கு முன்பு” என்று கூறியிருப்பதன் பொருள் ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றான (தவாபுல் இபாளா) என்ற ஹஜ்ஜுடைய தவாபாகும். இது கடமையல்லாத தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸயீ செய்தார் என்பதற்கு முரன்படாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.
ஸயீ என்பது தவாஃபை தொடர்ந்ததுதான். ஸயீ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன்பு தவாஃப் செய்திருக்கவேண்டும். தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்தால் அது கூடாது. இதையே இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ஆகியோர் கூறியுள்ளனர். கூடும் என்பதாக அதாவு கூறியுள்ளார். மறந்து செய்தால் அது கூடிவிடும் என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றே செய்தால் அது கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
மறதியினாலோ, அறியாமையினாலோ முற்படுத் தியோ பிற்படுத்தியோ செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”குற்றமில்லை” என்று கூறினார்கள்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃபிற்குப் பிறகு ஸயீ செய்துள்ளார்கள். உங்களின் ஹஜ் கிரியைகளை என்னிட மிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்வது கூடும் எனக் கூறுவோர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் ஹதீஸில் அதற்கு உண்டான எந்த சான்றும் இல்லை என்பதை மேற் கூறப்பட்ட செய்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களில் ஒன்றுக்குத் தான் ஆதாரமாக அமையும். 1. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்வதற்கு முன்னர் ஒருவர் ஸயீ செய்தால், அவர் மக்காவில் நுழையும்போது செய்யும் தவாஃப் செய்து அத்துடன் ஸயீயும் செய்தால் அந்த ஸயீ தவாஃபிற்குப் பின்புள்ள ஸயீயாகவே கருதப்படும். 2. அல்லது அறியாமையினாலோ மறதியினாலோ செய்துவிட்ட வராகக் கருதப்படுவார்.
இதில் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறியதன் காரணம், பொதுவாக தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்வது கூடும் என வாதிடும் சிலர் தற்போது உருவாகியுள்ளனர்.
எச்சரிக்கை :
ஒரு பெண் தவாஃப் செய்து முடித்ததின் பின்னால் மாதவிடாய் ஏற்படுமானால் இந்த நிலையில் அவள் ஸயீ செய்யலாம். ஏனெனில் ஸயீ செய்வதற்கு தூய்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ246 ல் கூறப்படுகிறது. ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்வதற்கு தூய்மை அவசிய மில்லை என்று அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களில் அதாவு, மாலிக், ஷாஃபியீ, அப+சவ்ர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இமாம் அஹ்மத் சொல்ல நான் கேட்டேன் என இமாம் அப+தா¥த் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்யும்போது, தவாஃப் முடிந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஃபா மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம். பின்னர் அவர் சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பன்னிரண்டாவது நாள் மினாவிலிருந்து சென்று விடலாம்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோர் அறிவிக்கிறார்கள். ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்த பின்னர் மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம் என அஃத்ரம் அறிவிக்கிறார்.
12. பெண்கள் பலவீனமானவர்களுடன் சேர்ந்து சந்திரன் மறைந்த பின்னர் முஸ்தலிஃபாவிருந்து மினாவிற்குச் செல்லலாம். மினாவிற்குச் சென்றவுடன் ஜம்ராவில் கல் எறியலாம். நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த அனுமதியாகும்.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ286 ல் முவப்பக் என்பவர் குறிப்பிடுகிறார். பலவீனமானவர்களையும், பெண்களை யும் முன்கூட்டியே அனுப்பிவிடலாம். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோர் தங்கள் குடும்பத் திலுள்ள பலவீனமானவர்களை முஸ்தலிஃபாவிலிருந்து முன் கூட்டியே அனுப்புகிறவர்களாக இருந்தார்கள். இவ்வாறே அதாவு, ஹனஃபி, ஸவ்ரி, ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது அவர்களுக்கு இரக்கம் காட்டுவதாகவும் நெரிச லிருந்து தடுப்பதாகவும் அமைந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ70ல் கூறுவதாவது ”யாருக்கு சலுகை இல்லையோ அவர் சூரிய உதயத்திற்குப் பின்புதான் கல் எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பெண்கள், பலவீனமா னவர்கள் போன்ற யாருக்கு சலுகை உள்ளதோ அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கல் எறிவது கூடும்.
இமாம் நவவீ அல்மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ125 ல் கூறுவதாவது: இமாம் ஷாஃபி அவர்களும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள். ”பெண்கள், பலவீனமா னவர்கள் போன்றோர் முஸ்தலிஃபாவிலிருந்து நடு இரவிற்குப்பின் கல் எறிவதற்காக மினாவிற்குச் சென்று மக்கள் நெருக்கடி ஏற்படும் முன்னர் சூரிய உதயத்திற்கு முன் அதை முடிப்பது தான் அவர்களுக்கு நபிவழியாக உள்ளது.”
13. ஹஜ் உம்ராவை பெண்கள் செய்து முடிக்கும்போது தங்கள் தலை முடியை விரல்நுனி அளவிற்கு வெட்ட வேண்டும். பெண்கள் தலைமுடியை மழிப்பது கூடாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ310 ல் கூறப்படுகிறது:
”பெண்கள் தலை முடியை வெட்டுவதே அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மொட்டை அடிப்பது அல்ல. அதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.” இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள்: ”இதை மார்க்க அறிஞர் கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். பெண்களைப் பொறுத்த வரை தலையை மொட்டை அடிப்பது, உடல் உறுப்பில் ஒன்றை வெட்டிக் கொள்வது போன்றதாகும்.”
”பெண்கள் மொட்டை அடிப்பது கூடாது. பெண் கள் முடியை குறைத்துக் கொள்ளவேண்டும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
ஒவ்வொரு பின்னலிருந்தும் விரல்நுனி அளவிற்கு பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறே இப்னு உமர், ஷாஃபியீ, இஸ்ஹாக், அபூதர் ஆகியோர் கூறியுள்ளனர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்.
பெண்கள் தங்கள் தலைமுடியின் எல்லாப் பகுதியி லிருந்தும் வெட்டுவது பற்றி இமாம் அஹ்மதிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆம், அவள் தன் தலைமுடியை ஒன்று சேர்த்து முன்பக்கம் வைத்து அதன் நுனியிலிருந்து விரல் அளவிற்கு வெட்டவேண்டும்கி எனக்கூறுவதாக இமாம் அபூ தாவூது அறிவிக்கிறார்.
இமாம் நவவி மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ150, 154 ல் கூறுகிறார்.
”பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிக்குமாறு அவளுக்குக் கட்டளையிடக்கூடாது. அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வது தான் அவள்மீது கடமையாகவுள்ளது.” ஏனெனில் தலையை மழிப்பது அவள் விஷயத்தில் பித்அத் ஆகும்.
14. மாதவிடாய்ப் பெண் கடைசி ஜம்ராவிற்கு கல் எறிந்து தன் தலைமுடியை வெட்டி விடுவாளானால் அவள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுகிறாள். இஹ்ராம் மூலம் அவளுக்குத் தடையாக இருந்த அனைத்தும் அவளுக்கு ஆகுமாம்விடுகிறது. ஆனால் கணவனுடன் உடலுறவு கொள்வது கூடாது. தவாஃப் செய்து முடிக் கும் வரை கணவனுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது. மீறி அவள் கணவனுடன் உடலுறவு கொள்வாளானால் அதற்கு பரிகாரமாக ஓர் ஆடு அறுத்து ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும்.
15. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து முடித்ததின் பின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் விரும்பிய நேரத்தில் பயணம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இறுதித் தவாஃபை அவள் செய்ய வேண்டியதில்லை.
”சஃபிய்யா பின்த் ஹுயய் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடமை யான தவாஃபை செய்தபின் மாதவிடாய் ஆம்விட்டார் கள். இதை அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறிய போது, நம்முடைய பயணத்தை விட்டும் அவள் நம்மை தடுத்துவிட்டாளா? என்று கேட்டார்கள். அதற்கு ‘அவள் ஹஜ்ஜுடைய தவாஃபை செய்துவிட்டாள். அதன் பிறகுதான் அவள் மாதவிடாய் ஆனாள்’ என்று கூறினேன். அதற்கு ”அப்படியானால் அவள் ஊருக்கு பயணம் செய்யலாம் என்று கூறினார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
”ஹஜ் செய்கின்றவர்களின் கடைசிச் செயல் கஅபாவை தவாஃப் செய்வதாக இருக்கவேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிடாய்ப் பெண்ணுக்கு சலுகை வழங்கினார்கள்கி என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
”மாதவிடாய்ப் பெண் கடமையான தவாஃபை செய்துவிட்டால் கஅபாவை இறுதி தவாஃப் செய்யும் முன்பாக ஊர் செல்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.” (நூல்: அஹ்மத்)
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ281 ல் கூறுகிறார்: இப்னுல் முன்திர் கூறுகிறார். இவ்வாறு செய்யுமாறுதான் பொதுவாக அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முக்னி என்ற நூலில் 3ழூ ழூ461 ல் கூறப்படுகிறது. இது பொதுவாக எல்லா மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். பிரசவமான பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களின் சட்டம்தான்.
16. மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்காக அங்கு சென்று சந்திப்பது பெண்களுக்கு நபிவழியாக ஆக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஃபத்வா தொகுப்பு என்ற நூலில் 3ழூ ழூ239 ல் ச¥தி அரேபியாவின் முஃப்தியான ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் கூறுகிறார்.
இரண்டு காரணங்களுக்காக பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஒன்று பொதுவான ஆதாரங்கள்: தடை செய்யப் பட்டது பொதுவாக இருக்குமானால் தக்க சான்றுகள் இல்லாமல் விதிவிலக்கு வழங்குவது கூடாது. அடுத்தது கப்ர் ஜியாரத் விஷயத்திலும் விலக்கப்பட்ட காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ர் விஷயத்திலும் உள்ளது.
ஷேக் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் தம் ஹஜ் உம்ரா வழிகாட்டி என்ற நூலில் கூறுகிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது என்பது ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப் பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த வரையில் எந்த கப்ரையும் ஜியாரத் செய்வது கூடாது. ஏனெனில்
”கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் மற்றும் அதற்கு விளக்கேற்றுபவர்களையும் அதை பள்ளிவாசலாக ஆக்கக் கூடியவர்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.”
மஸ்ஜிதுந் நபவியில் தொழும் எண்ணத்தில் மதீனா விற்குச் செல்வது அந்த பள்ளியிலிருந்து அல்லாஹ்விடம் துஆ கேட்பது ஏனைய பள்ளிகளில் செய்யும் அமல்களில் ஈடுபடுவது போன்றவை அனைத்து பள்ளிவாசல்களிலும் அனுமதிக்கப்பட்டதாகும். இது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.

பிரிவு 9 – குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
திருமணம் :
‘அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற் குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபை யையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண்,பெண் அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசால மானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 24:32)
இமாம் இப்னு கªர் கூறுகிறார்: ”இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.” அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.
”இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதா கவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற் கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என இப்னுமஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.
”அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.” (அல்குர்ஆன் 24:32)
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகக் கூறப்படுகிறது: ”திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.”
அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)
”திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்” என இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார். (தஃப்ªர் இப்னுகªர் 5ழூ ழூ94,95)
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32ழூ ழூ90 ல் குறிப்பிடுகிறார்.
இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை யும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப் பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம். விவாகரத்துச் செய்யப் பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திரும ணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. åதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப் பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாக ரத்து என்பது கிடையாது. åதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டையுமே அனுமதித்துள்ளான்.
‘அல்ஹத்யுன் நபவிய்யு’ என்ற நூலில் 3ழூ ழூ149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s