நடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :


நடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :

பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவதன் அவசியமும், அவனுக்கு மாறு செய்வதின் விலக்கலும்
முஸ்லிம் பெண்ணே நல்ல விஷயங்களில் உன்னுடைய கணவனுக்கு நீ கட்டுப்பட்டு நடப்பது உன்மீது கடமையாகும். ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ”ஒரு பெண் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ரமளான் மாதம் நோன்பு நோற்று, தன் கற்பை பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாளானால், அவள் விரும்பிய சுவர்க்கத்தின் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழைவாள்.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு ஹிப்பான்)
ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
தன்னுடைய கணவன் ஊரில் தன்முன் இருக்க அவனது அனுமதியின்றி ஒரு பெண் நோன்பு நோர்ப்பது கூடாது, அவனுடைய அனுமதியின்றி தன் வீட்டில் யாரையும் அவள் அனுமதிப்பதும் கூடாது”. (நூல்: புகாரி, முஸ்லிம்)
”கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் செல்லவில்லையானால், அதற்காக அவன் அவள் மீது கோபமான நிலையில் இரவைக் கழிப்பானா யின் காலை வரை வானவர்கள் அவளைச் சபித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் ”என் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு கணவன் தன்மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது மனைவி அதை மறுத்தால், அதனால் அவள் மீது அவன் திருப்தியாகும் வரை வானத்தில் உள்ள அல்லாஹ் கோபமடைகிறான்.”
மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவனுடைய வீட்டை கவனிக்க வேண்டும். அவனுடைய அனுமதியின்றி வெளியில் செல்லக்கூடாது.
”மனைவி தன் கணவனின் வீட்டை கண்காணிக்கக் கூடியவளாக இருக்கிறாள். தனக்கு கீழே உள்ளவர்களைப் பற்றி அவள் (மறுமையில்) விசாரிக்கப்படுவாள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மேலும், அவள் வீட்டுவேலைகளைக் கவனிக்க வேண்டும். வேலைக்காரியை வைப்பதற்கான தேவையை கணவனுக்கு ஏற்படுத்தாது இருக்கவேண்டும். இதனால் அவனுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா ஃபத்வா தொகுப்பில் 32ழூ ழூ260 ல் கூறுகிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ”நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மாரிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத சமயத்தில் பாதுகாக் கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள்.” (அல்குர்ஆன் 4:34)
மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, பயணத் தின்போது உடன் செல்வது உள்ளிட்ட அனைத்திலும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவள் மீது கடமை யாகும் என்பதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையும் இதையே அறிவிக்கிறது.
அல்ஹத்யு என்ற நூல் 5ழூ ழூ188 ல் இமாம் இப்ன}ல் கையிம் கூறுகிறார்கள். கணவனுக்கு மனைவி பணிவிடை செய்வது கடமை என்று கூறுபவர்கள் தங்களுக்கு ஆதார மாக அல்லாஹ் எந்த சமுதாயத்தவர்களிடம் சம்பாசனை செய்தானோ அந்த சமுதாயத்திடத்தில் இப்படித்தான் அறியப்பட்டிருந்தது, என்பதைக் காட்டுகின்றனர். பெண் கள் ஆடம்பரமாக இருப்பதும், கணவன் அவளுக்கு வேலை செய்து கொடுப்பதும், வீடு கூட்டுவது, மாவு அரைப்பது துணி துவைப்பது விரிப்பு விரிப்பது, வீட்டின் இதரப்பணிகளைச் செய்வது விரும்பத்தக்கதல்ல.
அல்லாஹ் கூறுகிறான்: கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.” (அல்குர்ஆன் 2:228)
”ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். ”
”(ஆண், பெண் இருபாலரில்) அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:34)
மனைவி கணவனுக்கு பணிவிடைச் செய்ய வில்லை யானால் அவன் பணிவிடைச் செய்யக்கூடியவனாக ஆம்விடுவான். இதுதான் கணவனுக்கு அவள் மீதுள்ள அதிகாரமாகும்.
மனைவிக்கு செலவு, ஆடை, வசிக்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதை கணவனின் மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் என்றால் அது அவன் அவளிடமிருந்து இன்பம் அனுபவிப்பதற்காகவும் அவனுக்கு பணிவிடை செய்கிறாள் என்பதற்காகவும், பொதுவாக கணவன் மனைவியரிடையே வழக்கத்தில் உள்ள ஒன்றிற்காகவும்தான்.
நிபந்தனையற்ற பொதுவான திருமண ஒப்பந்தங் களை பொறுத்தவரையில் நடைமுறையில் என்ன இருக்கிறதோ அந்த சட்டம் தான் அமுல்படுத்தப்படும். திருமணத்தைப் பொறுத்தவரையில் மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, வீட்டின் உள்ளே உள்ள நலன்களைக் கவனிப்பது. இது தான் நடைமுறையில் உள்ளதாகும். இவ்விஷயத்தில் கண்ணியமானவள், தாழ்ந் தவள் என்றோ பணக்காரி, ஏழை என்றோ வேறு படுத்துவது கூடாது. உலகப் பெண்களில் சிறந்தவரான ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் கணவனுக்கு பணி விடை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது, தாம் பணிவிடை செய்வதைப் பற்றி முறையிட்டார். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறை யாகக் கருதவில்லை.
ஒரு கணவன் தன்னை விரும்பாத நிலையில் அவள் அவனுடன் வாழ நினைக்கும் போது அவள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ ஒரு பெண் பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. (அல்குர்ஆன் 4:128)
”தன் கணவன் தன்னைவிட்டும் ஓடிவிடுவான் என்றோ, தன்னை புறக்கணிக்கிறான் என்றோ மனைவி அஞ்சுவாளானால், இந்நிலையில் மனைவி தன் உரிமை களில் செலவு, ஆடை, இரவுநேரத்தில் தங்குதல் போன்ற சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம், இதை கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவனுக்காக அவள் இதைச் செய்வதில் எந்த குற்றமும் இல்லை, கணவன் இதை ஏற்றுக் கொள்வதிலும் குற்றமில்லை என இப்னு கªர் விளக்கம் அளிக்கிறார்.ம்
அல்லாஹ் கூறுகிறான்: ”கணவன் மனைவியான இருவரும் தங்களுக்குள் சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (அல்குர்ஆன் 4:128)
அதாவது இருவருக்கும் இடையே சேர்த்து வைப்பது சிறந்ததாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி சவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வயதானபோது அவளைப் பிரிந்து வாழ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பினார்கள். அப்போது ‘தன்னை வைத் துக் கொள்ளுமாறும் தன்னுடைய நாளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாகவும் கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சமாதானமாம்க் கொண்டார்கள். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். (இப்னுகªர் 2ழூ ழூ406)
மனைவி கணவனுக்கு கோபமூட்டுபவளாக இருந்து கணவனோடு அவள் வாழ விரும்பாத நிலையில் அவள் என்ன செய்ய வேண்டும்?
”எந்த ஒரு பெண் தன் கணவனிடத்தில் தக்க காரணமின்றி விவாகரத்து கேட்கிறாளோ அவள் மீது சுவர்க்கத்தின் வாடை தடை செய்யப்பட்டுள்ளது” என ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்:அப+தா¥த், திர்மதி)
காரணம் அல்லாஹ்விடத்தில் மிகவும் கோபத்தோடு அனுமதிக்கப்பட்ட ஒன்று(தான்) விவாகரத்து சொல்லுத லாகும். அவசியத் தேவை ஏற்படும்போது தான் அதைப் பயன்படுத்த வேண்டும். அவசியமின்றி விவாகரத்துச் செய்வது வெறுக்கப்பட்டது. அதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. கணவனுடன் வாழ முடியாது என்ற அளவிற்கு அவன் மீதுள்ள கடமையை நிறைவேற்றத் தவறும்போதுதான் மனைவி கணவனிடமிருந்து தலாக் கைத் தேட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”முறைப்படி கணவன் மனைவி யாகச் சேர்ந்துவாழலாம். அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்.” (அல்குர்ஆன்: 2:229)
”தங்கள் மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டு விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே அதற்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்ப வனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். ஆனால் அவர்கள் விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன்: 2:226,227

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s