திருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :


திருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :

திருமணத்தைப் பகிரங்கப்படுத்த பெண்கள் முரசு அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கிடையில் மட்டுமே செய்யவேண்டும். மிåசிக் இருக்கக்கூடாது. இச்சையைத் தூண்டுகின்ற சப்தங்களோ அதற்குரிய கருவிகளோ பயன்படுத்தக்கூடாது. ஆண்கள் கேட்காத அளவில் பெண்கள் கவிபாடுவதில் தவறில்லை.
”திருமணத்தில் அனுமதிக்கப்பட்டதற்கும் அனுமதிக்கப்படாததற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது முரசு அடிப்பதும் சப்தம் எழுப்புவதும்தான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் 6ழூ ழூ200 என்ற நூலில் குறிப்பிடுகிறார்: திருமணத்தின் போது ‘தஃப்’ என்ற முரசு அடிப்பதும், உங்களிடத்தில் வந்தோம், உங்களிடத்தில் வந்தோம், என்பது போன்ற சிறிது பாடல்களை சப்தம் உயர்த்தி கூறுவதற்கும் இதில் ஆதாரம் உள்ளது. தவறுகளை தூண்டுகின்ற பாடல்களோ, கெட்டவைகளையும், அழகையும், மதுபானங்களையும் வர்ணிக்கின்ற வர்ணனைகள் அடங்கிய பாடல்கள் கூடாது. சாதாரண நேரத்தில் இவை தடுக்கப்பட்டது போன்று திருமணத்திலும் தடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறே மற்ற எல்லா தடுக்கப்பட்ட கேலிக்கைகளும் கூடாது.
முஸ்லிம் பெண்ணே! திருமணத்தின் போது நகைகள், ஆடைகள் வாங்குவதில் வீண் விரயம் செய்யாதே. இது அல்லா தடுத்துள்ள வீண் விரயமாகும். வீன்விரயம் செய்யக்கூடியவர்களை நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.
”நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.” (அல்குர்ஆன் 6:141)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s