மரண தண்டனை!


மரண தண்டனை என்பது மனித குலத்துக்கு நல்லதொரு பாடமாக இருந்து வருகிறது. தண்டனை பெறுவோம் என்ற மரண பயத்தால் பெரும்பான்மையினர் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள். இதனால் வலியவனிடமிருந்து எளியவன் விடுதலையடைகிறான். அதாவது அகம்பாவம், ஆணவம், பணத்திமிர் கொண்டவனும் குற்றமிழைத்தால் தண்டனை உறுதி என்றாகும் பொழுது, எளியவன் மீது அடக்கு முறையுடன் ஓங்கும் கைகளை வலியவன் தவிர்த்துக் கொள்வான்.

அவனைக் கொன்றால் நானும் சட்டத்தால் கொல்லப்படுவேன் என்று – எவ்வளவு பணபலத்துக்கும் உடன்படாத – எந்த சக்திக்கும் வளைந்து கொடுக்காத – உறுதிமிக்க மரண தண்டனை விதியியிருந்தால் அது மனித வள மேம்பாட்டுக்கு மிகவும் உதவிக் கொண்டிருக்கும்.

ஆனால் துரதிஷ்டம் நமது இந்திய நாட்டில், வெகு சிரமத்துடன் குற்றாவாளிகளை அடையாளம் கண்டு, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் விதித்தால், அந்த தண்டனை கூடாது என அரசியல் குறுக்கீடு, மற்றும் தன்னார்வலர்களின் பரிதாப சிபாரிசு என குற்றவாளிகளைக் காப்பாற்ற படையெடுத்து விடுகின்றனர்.

விளைவு, இச்செயல் குற்றவாளிகளை மேலும் தெம்பூட்டுகிறது. இந்த கதிக்கு, குற்றவாளிகளை பிடித்தது, நீதி விசாரணை நடத்தியது இவையனைத்தும் வீணாகி, வெறும் வெட்டி வேலையாகி விடுகின்றது. நியாயமான நீதி கிடைக்கும் என்று நம்பியவர்கள், சட்டம், நீதி விசாரணை என்பதெல்லாம் வெறும் மண்ணாங்கட்டி என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

முஹம்மது அப்ஸல்

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து அரசுக்கு எதிரான பெரும் நாச வேலையில் ஈடுபட்டு பொதுவுடமையை அழிக்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் சட்டத்தால் கொல்லப்பட வேண்டும். முறையான நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளியென நிரூபிக்கட்டு நீதி மன்றங்கள் வழங்கிய மரண தண்டனை அவர் மீது நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மரண தண்டனை இன்னொரு பயங்கரவாதிக்கு பாடமாக இருக்கும்.

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ”கருணை மனு” மற்றும் ”பொது மன்னிப்பு” போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!

பாதிக்கப்பட்டவன் இங்கிருக்க, சம்பவத்துக்கு சம்பந்தமே இல்லாதவர் குற்றவாளி மீது கருணை காட்டுவது சரியாகுமா..? நீதி மன்றங்கள் முறையான விசாரணையில் குற்றவாளிகளுக்கு நியாயமான மரண தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றும் முயற்சியில் நீதியுடன் கை கோர்ப்போம் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s